வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (12:26 IST)

ஒமிக்ரான் பெயரில் 1963ல் வெளியான படம்!? – ட்ரெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!

தற்போது உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் 1963லேயே அதுகுறித்து ஒமிக்ரான் என்ற பெயரிலேயே படம் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் வீரியமடைந்த வகையான ஒமிக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரானை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ஒமிக்ரான் குறித்து 1963லேயே இத்தாலியில் அன் ஒமிக்ரான் வேரியண்ட் என்ற படம் வெளியாகியுள்ளதாக அதன் போஸ்டரை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் ஒமிக்ரான் என்ற பெயரில் இத்தாலியில் வெளியானது ஏலியன் புனைவு படம் என்றும், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் போஸ்டர் சமீபத்தில் மார்பிங் செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இதேபோல கொரோனா பெயர் காமிக்ஸ் மற்றும் புத்தகங்களில் சில வருடங்களுக்கு முன்னதாகவே இடம்பெற்றிருந்ததாக அப்போது வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.