உல்லாசத்திற்கு அடிமையான மனைவி: கொடூரமாக குழந்தையை கொலை செய்த அவலம்
வேலூரில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை அவரது தாயே விஷ ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கள்ளக்காதல்களும் அதனால் ஏற்படும் கொலைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெற்றோர்களின் காம இச்சைகளுக்காக பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்படுவது தான் கொடூரத்தின் உச்சமே.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த சரணவன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா மற்றும் 3 வயது மகன் வேலூரில் வசித்து வந்தனர். கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சந்தியாவிற்கு வேறு ஒரு வாலிபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். உல்லாசத்திற்கு அடிமையான சந்தியா, இவர்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தையை விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீஸார் சந்தியாவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.