1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (06:58 IST)

வைகோவுக்கு 2, விசிகவுக்கு 1: தேமுதிக வரவால் திமுக கூட்டணியில் குழப்பம்!

அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக தற்போது திமுக கூட்டணியை நெருங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இது அறிவிப்பாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தேமுதிக வரவால் ஏற்கனவே பத்து தொகுதிகள் வழங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 2 தொகுதிகளை திரும்ப பெறுவது என திமுக முடிவெடுத்துள்ளது குறித்த செய்தியை நேற்றே பார்த்தோம். தற்போது மதிமுகவுக்கு 3, விசிகவுக்கு என்று முடிவு செய்திருந்த திட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது
 
தேமுதிக வரவால் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் என்றும் அதிலும் ஒன்று வைகோவிற்காக மாநிலங்களவை தொகுதி என்றும், விசிகவுக்கு 'சிதம்பரம்' தொகுதி மட்டுமே என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. திமுகவின் இந்த புதிய திட்டத்திற்கு மதிமுக ஓகே சொல்லிவிட்டதாகவும் ஆனால் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் குறைவான தொகுதிகளில்தான் திமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது