1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2024 (16:14 IST)

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

Annamalai Kasthuri

திமுகவை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார்.


 


 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வெளிநபரால் வளாகத்திலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஆளும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்த சென்றபோது தடுத்து கைது செய்யப்பட்டனர்.

 

இதுகுறித்து ஆவேசத்துடன் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் விரோதமாக செயல்படும் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்றும், தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ள போவதாகவும் கூறியிருந்தார். இன்று காலை அவ்வாறே தன் வீட்டு வளாகத்தில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாஜகவினரும் தங்களை தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டு வருகின்றனர்.
 

 

அண்ணாமலையில் இந்த போராட்டம் குறித்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி “என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சமூகவிரோதிகளை அடிச்சு தூக்க வேண்டிய தலைவன் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்ளுவதை பார்க்க முடியவில்லை. அண்ணாமலையின் வழி அனைவரின் வலியானால், தமிழகம் அரசீற்றம் கொண்டால், மாற்றம் வரும். வரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K