1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (11:03 IST)

கணவன் மனைவி இருவருடனும் பாலியல் உறவு வைத்திருந்த கல்லூரி மாணவன் - கடைசியில் நடந்த விபரீதம்

கடலூரில் கல்லூரி மாணவன் ஒருவன் கீழ்த்தரமாக செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மணப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராமன் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கு எமனாக வந்தான் கல்லூரி மாணவன் சந்தோஷ்மார்.
 
விழுப்புரம் சொர்ணாவூரை சேர்ந்த சந்தோஷ்குமாருடன் ராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவ்வப்போது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் சந்தோஷ்மார் அடிக்கடி ராமன் வீட்டிற்கு வந்து போயுள்ளார்.
 
அப்போது ராமன் மனைவி அனிதாவிற்கும், சந்தோஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனால் சந்தோஷ்மார் ராமனுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
 
ஆனாலும் விடாத ராமன் சந்தோஷ்குமாரை மிரட்டி அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை சந்தோஷ்மார் அனிதாவிடம் கூறியுள்ளார். பின் இருவரும் சேர்ந்து ராமனை கொல்ல திட்டமிட்டனர்.
 
ராமனுக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அனிதாவும்,  சந்தோஷ்குமாரும் சேந்து ராமனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் அனிதாவும் சந்தோஷ்குமாரும் சிக்கினர். போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.