திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (12:46 IST)

மது குடிக்க அனுமதிக்காததால் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்

சென்னையில் மது குடிக்க மனைவி அனுமதியளிக்காததால், கணவன் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி எஸ்.ஐ காலணியை சேர்ந்தவர் முகமது ஜாபர்(60). இவரது மனைவி முபாரக்(52). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிய நிலையில், மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
 
இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள ஜாபர், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜாபர் மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், முபாரக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முபாரக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.