யூ டியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவன் கைது
திருப்பூரில் யூடியூப் வீடியோ பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்து மனைவியை கொன்ற கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கிருத்திகா. கார்த்திக் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கிருத்திகா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கிருத்திகா கர்ப்பமுற்றார். கார்த்திக் அவரது நண்பரின் பேச்சைக்கேட்டு மனைவி கிருத்திகாவிற்கு யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். இந்த ஏடாகுடமான செயலால் கிருத்திகா பரிதாபமாக் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், அஜாக்கிரதாக செயல்பட்டு மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.