வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (22:07 IST)

தன் மாணவியை விமானத்தில் அழைத்து சென்று அசத்திய தலைமை ஆசிரியை

Student -headmistresses'
அரியலூர் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியை, தான் அளித்த வாக்குறுதியின்படி தன் மாணவியை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்
 
இந்தியா முழுவதும் ஒன்றிய அரசு சார்பில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 25ம் தேதி தேசிய திறனறி தேர்வு நடந்தது. 
 
இதில் அரியலூர் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 8 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, தேர்வில் வெற்றி பெறுபவர்களை விமானத்தில் அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்து ஊக்கப்படுத்தியிருந்தார்.
 
இந்த தேர்வில் 8ம் வகுப்பு மாணவி மிருணாளினி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து வாக்குறுதி அளித்தவாறு மாணவி மிருணாளினியை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தலைமை ஆசிரியை அமுதா நேற்று அழைத்து சென்றார். 
 
அங்கு சில இடங்களை சுற்றிக்காண்பித்து விட்டு, ரயிலில் அரியலூருக்கு அழைத்து வந்தார். தலைமை ஆசிரியரின் இந்த செயலை பெற்றோர், பொதுமக்கள் பாராட்டினர்.