1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 டிசம்பர் 2018 (08:49 IST)

உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண்: ஆடிப்போன நபர்; அதிரவைக்கும் பின்னணி

நாமக்கல்லில் நபர் ஒருவர் இளம்பெண்ணிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு என்னுடன் படுக்கையை பகிர்ந்து பணத்தை கழித்துக் கொள் என அந்த பெண் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேகர் என்பவர் வெளிநாட்டில் வேலை வேண்டி இளம்பெண் ஒருவரை அணுகியுள்ளார். அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் நான் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என அவர் கூறியதாக தெரிகிறது.
 
இதையடுத்து அந்த நபரிடன் நைசாக பேசி 5 லட்சத்தை பிடிங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி வேலையை பெற்றுத் தராமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் இழுத்தடித்துள்ளார் அந்த பெண். இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டதற்கு வேண்டுமென்றால் தினமும் என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டு ரூ.5 லட்சத்தை கழித்துக்கொள் என அந்த பெண் கூறினாராம்.
 
இதனால் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்ககோரி சேகர் சென்னையில் உள்ள  டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்த ஆயத்தமாகியுள்ளனர்.