வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2019 (13:25 IST)

’ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட ஐடி துறையினர் ‘ - என்.ராம் அதிரடி

தேர்தல் பரபரப்பு எல்லாம் ஓய்ந்து விட்டது.  ஆனால் தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் தமிழகத்தில் இருந்த பிரச்சாரங்களும், தலைவர்கள் ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டதையும் யாரும் மறந்துவிட முடியாது.
தேர்தல் சமயத்தில் தேர்தல் பறக்கும் படையினர் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்தனர். ஆனால் எதிர்கட்சிகளின் குரல்வலையைத்தான் தேர்தல் ஆணையம் நசுக்கும் விதத்தில் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்தது என்றும், ஆளுங்கட்சியின் பணநாயகத் தாண்டவத்தை எல்லாம் பெரிதாக வருமான வரித்துறையினரும்,பறக்கும் படையினரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை எனவும் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
 
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவர் முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரபல பத்திரிக்கையாளர் இந்து என். ராம் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது :
 
தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெறும். வருமான வரித்துறை தேர்தலுக்கு முன்னர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.என்று தெரிவித்தார்.