தனது சொந்த மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: போலீஸார் கைது.
கோவையில் 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போலீஸாரால் கைது செய்யப்படார்.
கோவை மாவட்டம் சுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளிக்கு 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 12 வயது சிறுமி அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமி படிக்கும் பள்ளியில் கடந்த வாரம் பெண் குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் தனது ஆசிரியையை சந்தித்த அந்த சிறுமி, தனது தந்தை தனக்கு தினமும் பாலியல் தொல்லை தருகிறார் என கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியான ஆசிரியை, உடனடியாக அந்த சிறுமியின் தாயாரிடம் நடந்த கொடுமைகளை கூறினார். பின்பு சிறுமியின் தாய், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், 12 வயது மகளை பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தது.
சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துவரும் நிலையில், தற்போது தந்தையே தனது சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செய்தி, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.