1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (10:02 IST)

மகள், வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை! – கொடூர தந்தை கைது!

சென்னையில் மகள், வளர்ப்பு மகளையே இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆவடி பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருபவர் முரளி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மனைவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் பட்டாபிராமை சேர்ந்த கஜலட்சுமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் முரளி. கஜலட்சுமி கணவருடன் விவாகரத்து வாங்கிவிட்டு தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தவர். முரளியை திருமணம் செய்து கொண்ட பின்னர் தன் மகளுடன் முரளியின் மகள்களையும் வளர்த்து வந்துள்ளார் கஜலட்சுமி.

இந்த நிலையில் கஜலட்சுமியின் மகளை முரளி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வர கஜலட்சுமி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் முரளியை கைது செய்து விசாரிக்கும்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளன. தண்டையார்பேட்டையில் சில ஆண்டுகள் முன்னாள் நடந்த இரட்டை கொலை வழக்கில் முரளிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கஜலட்சுமியின் மகளை மட்டுமல்லாமல் தனது சொந்த மகளையே முரளி பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முரளி மீது போக்சோ உள்ளிட்ட குற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.