மது அருந்துவோர்னு மரியாதையா சொல்லுங்க! – குடிமகனின் வைரல் வீடியோ!

viral
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 5 நவம்பர் 2019 (17:57 IST)
நாளுக்கு நாள் மது அருந்துவோர் செய்யும் சில காமெடியான சம்பவங்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகின்றன.

மது அருந்துபவர்கள் பலர் கவலைகளை மறக்க மது அருந்துவதாக சாக்கு சொல்லிக் கொள்கின்றனர். பலர் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களை இம்சிக்கின்றனர். ஆனால் சிலர் மது அருந்திவிட்டு பொது இடங்களில் ஏதாவது கலாட்டா செய்து வைக்கின்றனர். இதனாலேயே மது அருந்துபவர்களை ‘குடிகாரர்கள்’ என்று கேவலமாக நோக்கும் இயல்பு சமூகத்தில் உண்டு.

இங்கே ஒரு மது பிரியர் தங்களை குடிகாரன் என அழைக்கக்கூடாது என்று பெட்டிக்கடையில் போராட்டம் நடத்தும் வீடியோ வைரலாகியுள்ளது. பெட்டிக்கடைக்காரரிடம் பேசும் அந்த மது விரும்பி ”எங்களை ஏன் குடிகாரன் என கேவலமாக பேசுகிறீர்கள். மது அருந்துவோர் என மரியாதையாக சொல்லுங்கள். நாங்கள் குடிப்பதனால்தான் அரசாங்கமே இயங்கி கொண்டுள்ளது” என பேசுகிறார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. குடிகாரன், மது அருந்துவோர், மது விரும்பி என அப்படி அழைத்தாலும் மது உடலுக்கு நன்மை தருவதல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :