ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (20:03 IST)

பயில்வான் ரங்கநாதன் மீது போலீஸ் புகார்: விரைவில் கைதா?

பயில்வான் ரங்கநாதன் மீது போலீஸ் புகார்: விரைவில் கைதா?
பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த சில நாட்களாக பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல நடிகைகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் பெண்கள் குறித்து அவதூறாக சமூக ஊடகங்களில் பயில்வான் ரங்கநாதன் பதிவு செய்து வருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது 
 
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பயில்வான் ரங்கநாதன் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது