பெண்ணிடம் ஹிஜாப் அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது வழக்குப் பதிவு
இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஓட்டளித்தனர். ஆனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இ ந் நிலையில், மதுரை மேலூர் 8 வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப் அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது 4 பிரிவுகளில் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் , கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் போலீஸார் கிரிராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.