திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (14:53 IST)

கை,கால்களை உடைத்துவிடுவதாக ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு!

s r raja dmk
தனியார் நிறுவன ஊழியர்களைத் தகாத வார்த்தையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், சில  திமுகவினர் மீது எதிர்க்கட்சியினர் அவ்வப்போது புகார் அளத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் விதமாகவும், கம்பெனியை இழுத்து மூடி விடுவதாகவும், ஊழியர்களின் கை, கால்களை உடைத்தது விடுவதாகவும் தகராத வார்த்தைகளால் பேசினார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தனியார் நிறுவன சி இ ஓ கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான  எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.