வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 16 ஜூன் 2016 (17:51 IST)

’ஆஸ்கருக்கு சென்ற முதல் தமிழ்ப் படத்தை இயக்கியவர்’ - திருலோகசந்தர் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

ஆஸ்கர் விருது தேர்வுக்குச் சென்ற முதல் தமிழ்த் திரைப்படமான "தெய்வ மகன்" படத்தை இவர் இயக்கியவர் என்று திமுக தலைவர் கலைஞர், இயக்குநர் திருலோகசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’’பழம்பெரும் இயக்குனரும், பல வெற்றிப் படங்களை இயக்கியவரும்,   தனிப்பட்ட முறையில் என்னிடம் பற்றும் பாசமும் கொண்டவருமான அருமை நண்பர் ஏ.சி. திருலோகசந்தர் மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
 
சுமார் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பதும், அவர் நடிகர் திலகம் நடித்த 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களை, குறிப்பாக "ஆஸ்கர்" விருது தேர்வுக்குச் சென்ற முதல் தமிழ்த் திரைப்படமான "தெய்வ மகன்" படத்தை இவர் இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அவரது மறைவு குறித்து, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.