வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (13:32 IST)

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் – ஏ சி சண்முகம் நம்பிக்கை !

வேலூர் தேர்தலில் வாக்களித்த பின்னர் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வேலூர் தொகுதியில் அதிக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூரில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் ஏசி சண்முகம் அவர்களும், திமுக அதிமுக சார்பில் கதிர் ஆனந்த் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி அவர்களும் மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்  இதனை அடுத்து இன்று வேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தனது வாக்கையளித்த பின் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகம் செய்தியாளர்களிடம் ‘அனைத்து மக்களும், வேலையை ஒரு மணிநேரம் ஒதுக்கிவிட்டு வாக்களிக்க வேண்டும். வேலூர் தொகுதி மக்கள் 90-100% வாக்களித்தனர் என்ற பெயரை எடுக்க வேண்டும். இது முன்மாதிரியான தொகுதி என்ற பெயரை எடுக்க வேண்டும். ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் முடிவு இதில் மாறும். கட்சியை மறந்துவிட்டு நல்ல வேட்பாளருக்கு வாக்களிப்பதாக மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு முதல் மூன்று லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.