திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (15:33 IST)

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்காக புதிய செயலி: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

gingee masthan
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்காக புதிய செயலி: அமைச்சர் செஞ்சி மஸ்தான்
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக மக்களுக்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறி, அந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார். 
 
வெளிநாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து வேலை பார்க்க செல்பவர்கள் பதிவு செய்வதற்கான செயலியை வெளிநாட்டு வாழ் தமிழர் துறை அமைச்சர் செஞ்சுதான் இன்று தொடங்கி வைத்தார். 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த விழாவில் செயலியை தொடங்கி வைத்த பின் பேசிய அமைச்சர் செந்தில் மஸ்தான் இந்த செயலி மூலம் தவறான ஏஜென்சிகள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று பலர் சிக்கிக் கொள்வதில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார் 
 
இந்த செயலி வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த செயலியில் பதிவு செய்தபின் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
 
Edited by Mahendran