வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (14:37 IST)

974 தபால் வாக்குகள் செல்லாதவை: நெல்லை தொகுதியில் சோகம்..!

திருநெல்வேலி தொகுதியில் மொத்தம் 3000 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 974 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நெல்லை தொகுதியில் மொத்தம் 3000 தபால் வாக்குகள் பெற்றதாகவும் அதில் காங்கிரஸுக்கு 913 வாக்குகள், பாஜகவுக்கு 600 வாக்குகள் கிடைத்ததாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
 
தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு 322 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 62 வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் முறையாக விண்ணப்பத்தை நிரப்பாதது உள்ளிட்ட சில காரணங்களுக்காக 974 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
ரும்பாலும் தபால் வாக்குகளை அரசு ஊழியர்கள் தான் பதிவு செய்து வரும் நிலையில் 974 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran