ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (18:19 IST)

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று ! பீலா ராஜேஷ் அறிவிப்பு !

சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செய்லாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று வரைக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக இருந்தது. அதில் 8 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் தினமும் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தினசரி நடவடிக்கைகள் மற்றும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை பற்றி சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அதன் படி சில நிமிடங்களுக்கு முன்னர் பேசிய அவர் தமிழகத்தில் புதிதாக 96 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உள்ளவர்களின் எண்ணிக்கை 834 ஆகியுள்ளது. மேலும் இன்றிரவு வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்கும் புதிய கிட்கள் வர இருப்பதாகவும் அதன்மூலம் 30 நிமிடத்தில் கொரோனா வைரஸ் சோதனையை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.