1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (09:27 IST)

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது! – இலங்கை கடற்படை செயலால் அதிர்ச்சி!

fisherman
வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் பின்னர் விடுதலை செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நெடுந்தீவு அருகே கைதான மீனவர்களை காங்கேசந்துறையிலுள்ள துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K