வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (11:50 IST)

அதிரடியில் பொன்.மாணிக்கவேல் - ரன்வீர் ஷா வீட்டில் மேலும் 80 சிலைகள் பறிமுதல்

ரன்வீர் ஷா பண்ணை வீட்டில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் மேலும் 80 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 89 சிலைகளை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் மேல்மருவத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் இன்று ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் 80 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.