புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (15:28 IST)

8 மாவட்ட பாஜக தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்- அண்ணாமலை உத்தரவு

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற  நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக்  3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் மா நிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில்,  8 மாவட்ட பாஜக தலைவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைவர்  அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பாஜக கட்சி ரீதியிலான நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை,  மேற்கு, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு,  தி.மலை, ஆகிய 8  மாவட்டங்களில் தலைவர்கள் நீக்கப்படுகிறார்கள்.

இந்த 8 மாவட்டங்களுக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து அண்ணாமமலை உத்தரவிட்டுள்ளார்.