15ஆயிரத்தை நெருங்கும் தமிழகம், 10ஆயிரத்தை நெருங்கும் சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்

corona
இன்றைய கொரோனா நிலவரம்
Last Updated: வெள்ளி, 22 மே 2020 (18:27 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 786 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 14753 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 786 பேர்களில் சென்னையில் மட்டும் 569 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9364ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 846 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 7128 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழகத்தில் 12046 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 367,939 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :