திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (11:47 IST)

ஜெயலலிதா பிறந்தநாளில் 72 லட்சம் மரக்கன்று நடும் திட்டம்..

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் இது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரக்கன்று நட்டு, தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அதிமுக அமைச்சர்களும் பங்கேற்றனர்.

மேலும் இதே போல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மரம் நடும் நிகழச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.