வைரஸ் காய்ச்சலால் நேர்ந்த பரிதாபம்; பலியான 7 வயது சிறுமி
வைரஸ் காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆங்காங்கே பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வைரஸ் காய்ச்சலால் பல சிறுவர் சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்-ராஜமீனா தம்பதியரின் ஏழு வயது மகளான தியாஷினி, கடந்த 3 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். தியாஷினியை அவரது பெற்றோர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் நேற்று நள்ளிரவு தியாஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெறும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.