திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 மார்ச் 2021 (08:09 IST)

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 7 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் தற்போது மேலும் 7 மாணவ மாணவிகளுக்கு தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதில் திருப்பனந்தாள் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்றும் திருவையாறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 110 பேர் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது