திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (05:30 IST)

தினகரன் அணியில் 7 ஸ்லீப்பர்செல்கள்: எடப்பாடியின் அதிரடி

கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் அடிக்கடி கூறப்படும் ஒரு வார்த்தை ஸ்லீப்பர்செல். தினகரன் அணியின் ஸ்லீப்பர்செல், அதிமுகவில் இருப்பதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் ஆட்சியை கலைக்க தயாராக இருப்பதாகவும், தினகரன் அணியினர் கூறி வருகின்றனர். இதனால் அதிமுகவில் ஒருவித பதட்ட நிலை எப்போதும் காணப்படுகிறது.

இந்த நிலையில் தினகரன் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் 7 ஸ்லீப்பர்செல்கள், தினகரன் அணியிலும் இருப்பதாகவும், அவர்கள் அவ்வப்போது அதிமுக தலைமைக்கு தகவல் கூறி வருவதாகவும், தினகரன் அணியில் உள்ளவர்களை கூண்டோடு அதிமுகவுக்கு கொண்டு வருவதே இவர்களின் புரஜொக்ட் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தினகரன் அதிர்ச்சியில் உள்ளாராம். ஏற்கனவே தனிக்கட்சி ஆரம்பிக்க தங்கத்தமிழ்செல்வன் உள்பட ஒருசிலர் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில் திடீரென முளைத்திருக்கும் இந்த ஸ்லீப்பர்செல் விவகாரம் தினகரனை திக்குமுக்காட வைத்துள்ளது.