தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Virus
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
siva| Last Updated: புதன், 13 ஜனவரி 2021 (19:29 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 673 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 828,287 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 673 பேர்களில் பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் 192 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது 6,653 பேர் சிகிச்சையில் உள்ளனர்

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 6 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12242 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 821 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 809,392 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 62409 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 147,00,898 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :