1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 ஜூன் 2020 (08:10 IST)

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா: கிராமமே தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த கிராமமே தனிமைப்படுத்தப்பட்டதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திருச்சி மாவட்டம் மணப்பாறை என்ற பகுதியை அடுத்த கண்ணுடையான்பட்டி என்ற ஊராட்சி என்ற ஊராட்சியை சேர்ந்த ஒரு கிராமத்தில் 75 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
 
இந்த நிலையில் மூதாட்டியின் குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒரே குடும்பத்தில் 6 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்
 
இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த கிராமத்தையே தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதி என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது