செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (18:23 IST)

அதிமுக மாவட்ட சார்பில் 53 வது ஆண்டு துவக்க விழா!

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியை கடந்த 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மதுரையில் தொடங்கினார்.
 
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர்,   எடப்பாடி பழனிச்சாமி  அவரது ,
அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் 53வது ஆண்டு விழா.  
கரூர் மாநகராட்சி லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு  மாவட்ட கழக செயலாளர், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் பேரறிஞர்  அண்ணா முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
அதனைத் தொடர்ந்து
பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.