1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (09:05 IST)

சென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டண தள்ளுபடி!

சென்னை மக்களின் வரப்பிரசாதங்கள் ஒன்று மெட்ரோ ரயில் என்பதும் மெட்ரோ ரயில் குறைந்த கட்டணத்தில் மிக விரைவாக எந்தவித போக்குவரத்து இடையூறுமின்றி சேரும் இடத்தை சென்றடையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதன் காரணமாக பேருந்து மற்றும் மின்சார ரயிலில் செல்பவர்கள் பலர் தற்போது மெட்ரோ ரயிலுக்கு மாறியுள்ளனர் என்பதும் இதனால் மெட்ரோ ரயில் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் அவ்வப்போது பண்டிகை காலங்களில் சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று 50 சதவீத கட்டண தள்ளுபடி அறிவித்து உள்ளது 
 
இதன் காரணமாக இன்று காலை முதல் இரவு வரை பயணம் செய்யும் பயணிகள் 50 சதவீத கட்டண சலுகையுடன் பயணம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பொங்கல் தினத்திலும் இதேபோன்று 50% கட்டண சலுகை வழங்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது