வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (12:47 IST)

சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே 50 பேர் கைது: பெரும் பரபரப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடப் போவதாக கூறிய 50 பேர்கள் கோவில் அருகே கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் தேவாரம் பாட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் இதற்கு சிதம்பரத்திலுள்ள தீட்சதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று காலை சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடப் போவதாக இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் 50 பேர் கோவில் அருகே சென்றனர் 
 
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் கோவில் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது