1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (12:37 IST)

தளர்வுகளின் விளைவு? சிவப்பு மண்டங்களாக உருவெடுக்கும் 5 மாவட்டங்கள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் அடுத்த 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா உச்சம் தொடும் என்றுள்ளார். 
 
மேலும், அந்த மாவட்டங்களில் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், சிவப்பு மண்டலங்களாக உருவாக வாய்ப்புள்ள 5 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அம்மாவட்டங்களில் நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தெரிவித்துள்ளார்.