வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (09:33 IST)

வெயில் வாட்டுதா.. இதோ குளிர்விக்க வருகிறது மழை! – குளுகுளு அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டத்  தொடங்கியுள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி நாளை ஏப்ரல் 20 முதல் 23 வரை 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வரும் நிலையில் மழை குறித்த இந்த அறிவிப்பு மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K