எலக்ஷன் டியூட்டி முடிஞ்சதும் போலீஸுக்கு 4 நாள் லீவ்!!
கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதற்கட்ட தேர்தல் தொடங்கிய நிலையில் காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மாலை வரை நடைபெற்ற வாக்குபதிவின் முடிவில் 74.34% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட வாக்குபதிவு வரும் 9 ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்.12 ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆம், அக்.9 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குபதிவு முடிந்த பின் தொடர்ந்து 4 நாள் போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என கடலூர் எஸ்.பி.சக்திகணேசன் அறிவித்துள்ளார்.