1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (17:51 IST)

தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை!

Dhanalakshmi
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை என்று வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதால் அவர் காமன்வெல்த் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது
 
இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனலட்சுமி தனது தவறை ஒப்புக் கொண்டதால் அவருக்கு நான்கு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடும் தடைக்காலம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட காமன்வெல்த் போட்டிகளில் நீக்கப்பட்ட தமிழக வீராங்கனை தனலட்சுமி  3 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் தடை என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதேபோல் தமிழக தடகள வீரர் மகிமைராஜ் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன