வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (07:43 IST)

தமிழகத்தை தாக்க திட்டமிட்ட பயங்கரவாதிகள்: கைது செய்த போலீஸார்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவானவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தலைமறைவான அந்த மூவரும் பயங்கரமான தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால் தமிழகத்தின் க்யூ பிரிவு போலீஸ் தேடுதல் வேட்டையை தொடர்ந்து வந்தது. அவர்கள் குறித்த தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்குவதாகவும் அறிவித்தது.

இந்நிலையில் தலைமறைவான அந்த மூன்று பேருக்கும் உதவியதாக பெங்களூரில் முகமது அனீப்கான், இம்ரான்கான், முகமது சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த மூவரும் செல்போன், சிம்கார்டு போன்றவற்றை வாங்கி கொடுத்து தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்ல இவர்கள் உதவியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவம் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் 3 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.