வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (09:22 IST)

ரூ.2000 கோடிக்கு போதைப்பொருள் கடத்தல்.. பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரா?

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடி மேல் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பின்னணியில் இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் காவல் துறையின் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து டெல்லி போலீசார் மேலும் விசாரணை செய்தபோது கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடிக்கு மேல் மதிப்பிலான சுமார் 3500 கிலோ போதை பொருள் கடத்தி உள்ளதாகவும் கடத்தல் சம்பவங்களுக்கு பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவல் தமிழ் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva