வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (08:16 IST)

அரியலூர் அருகே நீரில் மூழ்கி குழந்தைகள் மரணம்!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் ஏரியில் மூழ்கி மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்  மாவட்டத்தில் உள்ள செந்துறை அடுத்த மணப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சுதாகர் மற்றும் ஜெயசீலன். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களின் குழந்தைகளான சுடர்விழி(7) சுருதி(10) ரோகித்(7) ஆகிய மூவரும் நேற்று வீட்டின் அருகேயுள்ள ஓடையில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குழந்தைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் இறந்துள்ளது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.