வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2021 (08:19 IST)

பால் தினகரன் வீட்டில் 2வது நாளாக வருமானவரி சோதனை..!

இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரன் அவர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இயேசு அழைக்கிறார் என்ற குழும்பத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
அதன்படி சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது நாளாக இந்த சோதனை தொடர்கிறது. வெளிநாடு மூலம் வந்த பணத்தை கணக்கு காட்டவில்லை என்ற புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான 23 இடங்களில் 200 ஐடி அதிகாரிகள் சோதனையில்  ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.