புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 30 நவம்பர் 2016 (13:34 IST)

புதிதாக வங்கி கணக்கு தொடங்கினால் ரூ.25 ஆயிரம் பணம்

கொடைக்கானலில் வங்கிகளில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுவதாக புரளி பரவியது.


 


 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு கீழ் டெபாசிட் செய்பவர்களுக்கு வட்டியில்லா கடனும், வங்கி கணக்கில் பணம் இல்லாமல் வைத்திருக்கும் இல்லதரசிகளுக்கு பணம் டெபாசிட் செய்யப்படும் என்றும் செய்தி பரவியது. 
 
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவர்களது பணத்தை எடுக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மாத சம்பளம் இன்றுமுதல் அரசு ஊழியர்களுக்கு வழங்க தொடங்கிவிடுவார்கள். பொதுமக்கள் சம்பள பணத்தை எப்படி எடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.
 
இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுவதாக வதந்தி பரவியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வங்கிகளில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுவதாக புரளி பரவியுள்ளது.