"24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்" - தமிழ்நாடு அரசு உத்தரவு..!
24 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றும் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 08) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில், திருவல்லிகேணி துணை ஆணையர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மைலாப்பூர் துணை ஆணையராக ஹரிஹரபிரசாத் நியமயனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சிக்கு துணை ஆணையர் மாற்றப்பட்ட நிலையில் காலியாக இருந்த பதவிக்கு புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நுண்ணறிவு பிரிவுக்கு மற்றொரு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, துணை ஆணையராக ராமமூர்த்தி உள்ள நிலையில், சக்தி கணேசன் மற்றொரு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, சேலம், கருர், நாகை ஆகிய மாவட்டங்களும் புதிய எஸ்.பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, பெரம்பலூருக்கு புது எஸ்.பி: கோவை எஸ்.பி.ஆக கார்த்திகேயன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் எஸ்.பி-ஆக ஆதர்ஷ் பச்சேரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் எஸ்பியாக பெரோஸ் கானும் சேலம் எஸ்.பி-ஆக கௌதம் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட எஸ்.பி-ஆக நிஷா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தர்மபுரி மாவட்ட எஸ்.பி-ஆக மகேஸ்வரன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி-ஆக பிரபாகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் துணை காவல் ஆணையராக ஹரி கிரண் பிரசாத் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட எஸ்.பி-ஆக மதிவாணன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.