திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (12:43 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை என்ன??

தமிழகத்தில் இதுவரை 24,094 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் 5,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரொனா தொற்றால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். 5,596 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் இதுவரை 5,58,534 பேர் குணமடைந்துள்ளனர்.
 
சென்னையில் கொரொனாவால் மட்டும் 1,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,71,415 பேராக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகும். இதுவரை 9,718 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் நேற்று வெளியான சுகாதாரத்துறை அறிக்கையில், ஒரே நாளில் 99 குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 24,094 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.