ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம்.. வடலூரில் பரபரப்பு..!
ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள வந்த 21 வயது இளைஞர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடலூரில் ஆணழகன் போட்டி நடந்து கொண்டிருந்தபோது அதில் தமிழகம் முழுவதும் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் பெரிய கொல்லம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் என்ற 21 வயது இளைஞர் 70 கிலோ எடைப்பிரிவில் இந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டார். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இடையில் பிரட் சாப்பிட்டார். அப்போது பிரட் திடீரென அவரது உணவு குழாயில் சிக்கியதை அடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.
இது ஒரு வடலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள வந்த 21 வயது இளைஞர் திடீரென மரணம் அடைந்தது வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran