சென்னை வந்த கப்பலில் யாருக்கும் கொரோனா இல்லை; சுகாதாரத்துறை உறுதி
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஊழியர்களை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 18 ஆம் தேதி சீனாவில் இருந்து ஒரு கப்பல் வந்தது. அதில் இருந்த 19 பேரில் இரண்டு பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஊழியர்களையும் பரிசோதத்ததில், கொரோனா வைரஸ் இல்லை என் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.