வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (14:01 IST)

தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழை?

தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் முதலாக கோடைக்காலம் தொடங்கி நடந்து வந்தாலும் இடையே ஏற்பட்ட புயல் காரணமாக மே மாதத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. தற்போது கோடைக்கால முடிய உள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது.
 
இந்நிலையில் 13 முதல் 15 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூரிலும் மேற்கு திசை காற்று காரணமாக 15 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.