செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (17:42 IST)

கள்ளக்குறிச்சி கலவரம்: 15 கறவை மாடுகள் காணவில்லை என புகார்!

cows
கள்ளக்குறிச்சியில் நேற்றைய கலவரம் நடந்த நிலையில் ஏராளமான பள்ளி பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் 15 கறவை மாடுகளும் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
பள்ளி மாணவிக்கு நீதி வேண்டும் என்று கேட்டு நடந்த போராட்டத்தில் பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பள்ளியில் இருந்த டேபிள் சேர் ஏசி உட்பட பல பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இவர்களது நோக்கம் உண்மையிலேயே இறந்த மாணவிக்கு நீதி வேண்டுமா அல்லது கொள்ளை அடிப்பதா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்த நிலையில் கலவரம் நடந்த இடத்தின் அருகில் உள்ள பொதுமக்களின் 15 கறவை மாடுகள் காணவில்லை என்றும் இதையும் போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் இருந்த திருடர்கள் தான் திருடி சென்றிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது