வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 அக்டோபர் 2021 (07:04 IST)

144 தடை உத்தரவு: தஞ்சையில் பெரும் பரபரப்பு!

தஞ்சையில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் என்ற பகுதியில் இரு சமூகத்தினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை சமாதானப்படுத்த சென்ற காவலர்கள் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் இரு சமூகத்தினர் இடையே நடந்த கடும் மோதலில் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பதற்காக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் 2 பேருக்கும் மேல் பொது இடத்தில் கூட கூடாது என்பது உள்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மறு உத்தரவு வரும் வரை அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரம் காரணமாக 12 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.